தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதமரின் பயணம்: பியோ வரவேற்பு

 பிரதமரின் பயணம்: பியோ வரவேற்பு

 பிரதமரின் பயணம்: பியோ வரவேற்பு


ADDED : டிச 16, 2025 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடியின் பயணத்தை, இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (பியோ) வரவேற்றுள்ளது.

பியோ தலைவர் ரால்ஹான் அறிக்கை:

பிரதமரின் மூன்று நாடுகளுக்கான இப்பயணம், இந்திய ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளை அணுகவும், வர்த்தக வழிகளை பன்முகப்படுத்துவதற்கும், நீண்ட கால வணிக ஒத்துழைப்புகளை வளர்க்கவும் பெரிதும் உதவும்.

மேற்காசியாவுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஜோர்டான் முக்கிய நுழைவாயில். ஜோர்டானுடான மேம்பட்ட பொருளாதார உறவு, மருந்து, இன்ஜி., பொருட்கள், ஜவுளி, ஐ.டி., சேவைகள், உணவு மற்றும் வேளாண் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும்.

எத்தியோப்பியாவுக்கு பிரதமரின் முதல் பயணமாக இது அமைகிறது. இருதரப்பு வர்த்தகம் 5.5 கோடி அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. ஆட்டோமொபைல், இயந்திரங்கள், மருந்துகள், கல்வி சேவைகளில் எத்தியோப்பியாவின் விரிவடையும் சந்தை வாய்ப்புகள், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

ஓமன் பயணமானது, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தளவாடங்கள், தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் எம்.எஸ்.எம்.இ., ஒத்துழைப்பில் புதிய வழிகளை ஆராய, இந்தப் பயணம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us