/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விருதுக்கு நாங்களே மதிப்பிடுவதா தலைமையாசிரியர்கள் கேள்வி
/
விருதுக்கு நாங்களே மதிப்பிடுவதா தலைமையாசிரியர்கள் கேள்வி
விருதுக்கு நாங்களே மதிப்பிடுவதா தலைமையாசிரியர்கள் கேள்வி
விருதுக்கு நாங்களே மதிப்பிடுவதா தலைமையாசிரியர்கள் கேள்வி
ADDED : பிப் 03, 2024 12:58 AM
கோவை;பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு, பள்ளி செயல்பாடுகளை, உரிய தலைமையாசிரியர்களே எப்படி மதிப்பிடுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்டத்திற்கு இரு பள்ளிகளுக்கு, பேராசிரியர் அன்பழகன் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.
சிறந்த கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கடந்த மூன்று ஆண்டு பொதுத்தேர்வு ரிசல்ட், கல்விசாரா மன்றங்களின் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிறந்து விளங்கும் பள்ளிகளுக்கு, விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, மாவட்ட, மாநில அளவில் தேர்வு குழு அமைத்து, சிறந்த பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும், 'கூகுள் பார்ம்'மில் கேள்விகள் அனுப்பி, உரிய தலைமையாசிரியரே மதிப்பெண் வழங்கி, எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே, மதிப்பெண் வழங்குவது எப்படி சரியான அளவீடாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலரிடம் இது குறித்து பேசினோம். அவர் கூறுகையில், 'விருதுக்கு தகுதியான பள்ளிகள் கருத்துரு அனுப்புமாறு கோரி, குழு அமைத்து, ஆய்வு செய்து, மதிப்பெண் வழங்குவதே, சரியான நடைமுறையாகும். எந்த தலைமையாசிரியரும், தம் பள்ளிக்கு குறைவான மதிப்பெண்கள் வழங்க மாட்டார்கள்.
மாவட்டத்திற்கு இரு பள்ளிகளுக்கே விருது என்பதால், 1:2 விகிதத்தில், நான்கு சிறந்த பள்ளிகளை தேர்வு செய்ய, அனைத்து தலைமையாசிரியர்களும், படிவத்தை நிரப்பி உள்ளீடு செய்தால், வீண் குழப்பம் ஏற்படும்' என்றனர்.

