/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தாதாரர் சேவைக்கு முன்னுரிமை; மண்டல பி.எப்., கமிஷனர் தகவல்
/
சந்தாதாரர் சேவைக்கு முன்னுரிமை; மண்டல பி.எப்., கமிஷனர் தகவல்
சந்தாதாரர் சேவைக்கு முன்னுரிமை; மண்டல பி.எப்., கமிஷனர் தகவல்
சந்தாதாரர் சேவைக்கு முன்னுரிமை; மண்டல பி.எப்., கமிஷனர் தகவல்
ADDED : ஏப் 15, 2025 11:26 PM

கோவை; கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) முதன்மை ஆணையராக, பிரசாந்த் நேற்று பொறுப்பேற்றார்.
கோவை மற்றும் பொள்ளாச்சி வருவாய் மாவட்டங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கூடலுார் ஆகிய பகுதிகள், கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகார வரம்புக்கு உட்பட்டவை. இதன், மண்டல வருங்கால வைப்பு நிதி முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்ட பிரசாந்த், நேற்று பொறுப்பேற்றார்.
இவர், கடந்த காலங்களில் மங்களூரு, கோவை, திருநெல்வேலி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில், பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
பிரிவு 370 ரத்து செய்த பின், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மண்டலங்களில் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள், 1952ம் ஆண்டு சட்ட விதிகளை செயல்படுத்துவதற்காக, முதன்முறையாக, முதன்மை ஆணையராக, பிரசாந்த் நியமிக்கப்பட்டார்.
வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு, சேவை மற்றும் சலுகைகள் அளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என, அவர் தெரிவித்துள்ளார்.
வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள், ஒவ்வொரு நாளும் பிற்பகல், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரை, முன்அனுமதி பெற்று சந்திக்கலாம், என, மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-2 சுரேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

