/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கியோருக்கு சிறை
/
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கியோருக்கு சிறை
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கியோருக்கு சிறை
மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கியோருக்கு சிறை
ADDED : ஜன 02, 2025 05:51 AM
தொண்டாமுத்தூர்; மாதம்பட்டியில், மனநலம் பாதிக்கப்பட்டவரை, நிர்வாணமாக்கி தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மாதம்பட்டி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சாவித்திரி,45; கூலித்தொழிலாளி. இவருக்கு, ஒரு மகளும், பிரவீன் குமார், 18 என்ற மகனும் உள்ளனர். பிரவீன்குமார், பிறந்ததில் இருந்து சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்ற பிரவீன்குமார், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. தாய் சாவித்திரி, பல இடங்களிலும் தேடியுள்ளார்.
அப்போது, அதே பகுதியில் உள்ள விக்னேஷ் என்பவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பிரவீன்குமார் அழுது கொண்டிருந்தார்.
பிரவீன்குமாரிடம் விசாரித்தபோது, விக்னேஷ்,34, லிஜித்குமார், 26 ஆகியோர் மதுபோதையில் தன்னை நிர்வாணமாக்கி, பி.வி.சி., பைப்பால் அடித்து துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சாவித்திரி அளித்த புகாரின்பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷ் மற்றும் லிஜித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

