/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்தாண்டு சிறை தண்டனை பெற்று தப்பிய கைதிக்கு மீண்டும் சிறை
/
பத்தாண்டு சிறை தண்டனை பெற்று தப்பிய கைதிக்கு மீண்டும் சிறை
பத்தாண்டு சிறை தண்டனை பெற்று தப்பிய கைதிக்கு மீண்டும் சிறை
பத்தாண்டு சிறை தண்டனை பெற்று தப்பிய கைதிக்கு மீண்டும் சிறை
ADDED : பிப் 08, 2024 06:40 AM

கோவை : மோசடி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர், ஜாமினில் வெளியே வந்த பிறகு தப்பியதால், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கோவை, பேருர் அருகேயுள்ள காளம்பாளையத்தில் செயல்பட்டு வந்த 'செல்வஜெயம் புரோமோட்டர்ஸ்' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், வீடு கட்டி தருவதாக கூறி, 65 பேரிடம், 2.97 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கு, கோவை டான்பிட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில், அந்நிறுவன இயக்குனர் ஜெகதீஸ்வரனுக்கு, 10 ஆண்டு சிறை மற்றும் மூன்று கோடி ரூபாய் அபராதம் விதித்து, 2022, டிச., 22ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெகதீஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'மோசடி செய்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுத்து விடுவதாகவும், அதற்கான தொகையை ஏற்பாடு செய்ய தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமினில் விடுவிக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.
விசாரித்த ஐகோர்ட், மொத்த அபராதத்தில், ரூ.63 லட்சம் செலுத்தி கீழ் கோர்ட்டில் ஜாமின் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டது.
ஆனால், டான்பிட் கோர்ட்டில், ஐந்து லட்சம் ரூபாய் மட்டும் செலுத்தி விட்டு, ஜாமினில் சென்றவர், மீதி தொகையை செலுத்தவில்லை. அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
பணம் செலுத்தாதது குறித்து, கோவை பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். விசாரித்த ஐகோர்ட், ஜெகதீஸ்வரன் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது.
தலைமறைவான ஜெகதீஸ்வரனை,47, போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மீண்டும் மோசடி
ஜாமினில் வெளியே வந்த ஜெகதீஸ்வரன், காந்திபுரத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி, பல கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

