/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் ஆம்புலன்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தணும்
/
தனியார் ஆம்புலன்ஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தணும்
ADDED : அக் 15, 2025 11:40 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் இயக்கப்படும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர்காக்கும் கருவிகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதிவேகமாக இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், விபத்து குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், '108' ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு நிகராக, தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் போட்டி போட்டு, சம்பவ இடத்துக்கு விரைகின்றன.
பெரும்பாலான தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில், அவசர மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் இருப்பதில்லை. விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகளும் இருப்பு வைக்கப்படாமல் உள்ளது. இதனால், சில நேரங்களில், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடிவதில்லை.
தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் உயிர்காக்கும் கருவிகள், அத்தியாவசிய மருந்துகள் என, அடிப்படை கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்ய மருத்துவ பணிகள் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.