/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களிடையே கலைத்திருவிழா போட்டி
/
பள்ளி மாணவர்களிடையே கலைத்திருவிழா போட்டி
ADDED : அக் 15, 2025 11:40 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழாவில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.
பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையத்துக்கு உட்பட்ட, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள், வடக்கு வட்டார வள மையத்தில் நடைபெற்று வருகின்றன.
வட்டார கல்வி அலுவலர்கள் நேசமணி, வெள்ளிங்கிரி போட்டிகளை துவக்கி வைத்தனர். கலைத்திருவிழாவில், பேச்சு, கட்டுரை, ஓவியம் வரைதல், நாட்டுப்புற நடனம், கிராமிய நடனம், பாடல் ஒப்புவித்தல் என, 14 வகையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி அசத்தி வருகின்றனர். பொள்ளாச்சி வடக்கு வட்டார வளமையம் சார்பில் நடந்த, கலை திருவிழா போட்டில் திறமையை வெளிப்படுத்திய மாணவியர் கிராமிய நடனம் ஆடினர். இதேபோன்று, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகளில் அசத்தினர். ஆசிரியர் பயிற்றுநர்கள் ரஞ்சித், சத்தியமூர்த்தி, சுகன்யா ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர்.