/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ்களில் அடாவடி வசூல்; போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
/
தனியார் பஸ்களில் அடாவடி வசூல்; போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
தனியார் பஸ்களில் அடாவடி வசூல்; போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
தனியார் பஸ்களில் அடாவடி வசூல்; போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
ADDED : ஆக 20, 2025 10:02 PM

கோவை; உக்கடத்தில் இருந்து என்.ஜி.ஜி.ஓ., காலனி வரை இயக்கப்படும், 38 வழித்தட எண் கொண்ட தனியார் டவுன் பஸ்சில் குறைந்த பட்ச கட்டணமாக, 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் பயணிக்கும் துாரம், ஸ்டேஜ் ஆகியவற்றை கவனத்தில் கொள்வதில்லை.
10, 12, 14, 16 ரூபாய் என்கிற விகிதத்தில், கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கண்டக்டர் கொடுக்கும் டிக்கெட்டுகளுக்கு புறப்படும் இடத்தில் இருந்து, ஒவ்வொரு 'ஸ்டேஜ்' வாரியாக, 'இன்வாய்ஸ் என்ட்ரி' பதிவு செய்வதில்லை.
அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச கட்டணம், முதல் மூன்று கி.மீ., துாரத்துக்கு, 5 ரூபாய். அடுத்து வரும் ஒவ்வொரு இரண்டு கி.மீ.,க்கு ஒரு ரூபாய் உயர்த்தி, கட்டணம் வசூலிக்க வேண்டும். அந்த கட்டண விகிதங்களை, எந்தவொரு தனியார் டவுன் பஸ்சிலும் வசூலிப்பதில்லை. மாறாக, 10, 15, 18 ரூபாய் என கூடுதலாக வசூலிக்கின்றனர்.
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் விஸ்வநாதனிடம் கேட்டபோது, ''அரசு நிர்ணயித்த கட்டணத்தையே, பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைக்கு புறம்பாக கட்டணம் நிர்ணயிப்பதும், வசூலிப்பதும் தவறு. இதுபோன்ற பஸ்களை ஆய்வுக்கு உட்படுத்தி, விளக்கம் கேட்கப்படும். தவறுகள் தொடரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பஸ் பறிமுதல் செய்யப்படும்,'' என்றார்.