/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூட்டிய அறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்
/
பூட்டிய அறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்
பூட்டிய அறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்
பூட்டிய அறையில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்
ADDED : அக் 16, 2024 12:20 AM
கோவை: பூட்டிய அறையில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்த, தனியார் நிறுவன ஊழியர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லுாரை சேர்ந்தவர் தமிழரசன், 44. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் புணிபுரிந்து வந்தார்.
சரவணம்பட்டி மருதம் நகரில் உள்ள தங்கும் விடுதியில், 3வது மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இரு தினங்களுக்கு முன், அவரது நண்பர் கார்த்திக், மொபைல் போனில் தொடர்பு கொண்டார். போனை தமிழரசன் எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த கார்த்திக், தமிழரசனுடன் பணிபுரியும் ஜானி ஜெயச்சந்திரன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ஜானி ஜெயச்சந்திரன், தமிழரசன் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது, கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது.
ஜானி ஜெயச்சந்திரன் அங்கிருந்தவர்கள் உதவியுடன், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். தமிழரசன் வாயில் ரத்தம், நுரை வழிந்த நிலையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.