/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம்; பங்கேற்க கலெக்டர் அழைப்பு
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம்; பங்கேற்க கலெக்டர் அழைப்பு
தனியார் வேலைவாய்ப்பு முகாம்; பங்கேற்க கலெக்டர் அழைப்பு
தனியார் வேலைவாய்ப்பு முகாம்; பங்கேற்க கலெக்டர் அழைப்பு
ADDED : அக் 04, 2024 11:30 PM
கோவை, : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் பயனடையுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரியிலுள்ள கற்பகம் கலை அறிவியல் கல்லுாரியில் வளாகத்தில் அக்.,5 (இன்று) நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு துவங்கும் முகாம், மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. இதில் 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், கார்மென்ட்ஸ், விற்பனை, சி.என்.சி.ஆபரேட்டர்கள், எலக்ட்ரிக்கல் துறையை சேர்ந்த நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.
இதில் 8ம் வகுப்பு முதல் இளங்கலை மற்றும் முதுகலை தொழில்நுட்ப கல்வி, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ., படிப்பு மற்றும் பயிற்சியை நிறைவு செய்தவர்கள் பங்கேற்கலாம்.
வயது 18 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். பயோடேட்டா மற்றும் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்று பயனடையலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.