/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரும் 18ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
/
வரும் 18ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 14, 2025 11:28 PM
கோவை; மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 18ல் நடக்கிறது.
கலெக்டர் அறிக்கை:
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.
ஜூலை மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ம் தேதி காலை 10:00 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடக்கிறது.
இம்முகாமிற்கு எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங் முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்களது சுயவிபரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகலுடன் பங்கேற்கலாம்.
வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு, ஆட்களை தேர்வு செய்யஉள்ளனர்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.