/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
/
நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜன 22, 2026 05:04 AM
கோவை: மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம், நாளை காலை 10:00 மணி முதல் நடத்தப்படுகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், சுய விவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.முன்னணி தனியார் நிறுவனத்தினர், காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படுவோருக்கு, நியமன ஆணை வழங்கப்படும். பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணைய தளங்களில் பதிவு செய்யலாம். முகாமை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெற்று பயனடைய, கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
விவரங்களுக்கு: 0422- 2642388.

