தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

 நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : ஜன 23, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து, மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்துகின்றனர்.

நாளை நவ இந்தியா, ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் எஸ்.என்.ஆர்., கலையரங்கில் காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் 70க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் மற்றும் சர்வதே நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் நிரப்பப்படவுள்ளது.

அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.ஐ. டி., படித்தவர்களும், முன் அனுபவம் இல்லாதவர்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். ஆர்வமுள்ளவர்கள், 96296 44460, 78457 33567, 75488 78810 மற்றும் 75400 73831 ஆகிய மொபைல்எண்கள் மற்றும் santhosh recruitment@roots.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us