தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் வேலை வாய்ப்பு முகாம்; இதுவரை 3,000 பேர் பதிவு

தனியார் வேலை வாய்ப்பு முகாம்; இதுவரை 3,000 பேர் பதிவு

தனியார் வேலை வாய்ப்பு முகாம்; இதுவரை 3,000 பேர் பதிவு


ADDED : செப் 18, 2024 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 10:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவையில், வரும் 21ல் நடக்கும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க, இதுவரை, 3,000த்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 21ம் தேதி, கோவை ரத்தினம் கலை, அறிவியல் கல்லுாரியில், காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை நடத்தப்படுகிறது.

இதுவரை, 250 தனியார் நிறுவனங்களும், 3,000த்துக்கும் மேற்பட்ட வேலை தேடுவோரும் பதிவு செய்துள்ளனர். நேற்று, 'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்' அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வேலை வாய்ப்பு முகாம் குறித்து, ஆட்டோ பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் கருணாகரன் உட்பட பலர்பங்கேற்றனர்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க வேண்டி, நாளை வரை பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

முகாம் நடக்கும் நாளில், எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்த அறையில் இருக்கின்றனஎன அறிந்துக் கொள்ளும் வகையில், முகாமில் பங்கேற்பவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us