/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரச்னைகளுக்கு தீர்வு காண தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு
/
பிரச்னைகளுக்கு தீர்வு காண தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு
பிரச்னைகளுக்கு தீர்வு காண தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு
பிரச்னைகளுக்கு தீர்வு காண தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு
ADDED : ஜன 28, 2025 11:53 PM

கோவை; தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கூட்டம், பீளமேடு நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியில், நேற்று நடந்தது.
சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் மோகன் சந்தர் பேசுகையில், ''தனியார் பள்ளிகளை தற்போது பலவித போராட்டங்களுக்கு மத்தியில் நடத்த வேண்டியுள்ளது. முதலில் சிறு, சிறு சங்கங்கள், பள்ளிகளின்பிரச்னை பற்றி அரசிடம் பேசிவந்தன; ஆனால், எதுவும் நடக்கவில்லை.
தற்போது ஆறு சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளோம். நாம் அதிக உறுப்பினர்களை கொண்டுள்ளோம். நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், சங்கத்தை மேலும் பலப்படுத்தி, பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,'' என்றார்.
சங்கத்தின் மாநில தலைவர் அரசகுமார் பேசுகையில், ''பள்ளி நடத்துவதில் மிகப்பெரிய சமூக சிந்தனை ஆட்கொண்டுள்ளது. பொருளாதார முதலீடு விஷயத்தில், நாம் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறோம். இதுபோன்ற இக்கட்டான சூழலில் பள்ளிகளை நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நாம் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்,'' என்றார்.
இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.