/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் டவுன் பஸ் இரவில் இயக்கமில்லை; அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை
/
தனியார் டவுன் பஸ் இரவில் இயக்கமில்லை; அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை
தனியார் டவுன் பஸ் இரவில் இயக்கமில்லை; அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை
தனியார் டவுன் பஸ் இரவில் இயக்கமில்லை; அதிகாரிகள் கண்காணிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 31, 2025 09:39 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு, அரசு 'பர்மிட்' பெற்ற தனியார் பஸ்களின் இரவு நேர இயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 90க்கும் மேற்பட்ட அரசு டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, அதிகப்படியான தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக, இரவு நேரத்தில் முறையான வழித்தடத்தில் இயக்க தனியார் பஸ்களுக்கு 'பர்மிட்' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து, இரவு, 7:30 மணிக்கு எந்தவொரு தனியார் பஸ்சும் முறையாக இயக்கப்படுவதில்லை.
அதாவது, பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்படும் தனியார் பஸ்கள், கிராமங்களைச் சென்றடைந்தால், அங்கிருந்து நகருக்கு வரும் பயணியர் வருகை குறைந்தால், 'டிரிப்'பை முடித்துக் கொள்கின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது: தனியார் பஸ்களை பொறுத்தமட்டில், இரவு நேரத்தில் கிராமங்களுக்கு முறையான வழித்தடத்தில் இயக்க வேண்டும். அந்தந்த கிராமத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் தனியார் பஸ்கள், மீண்டும் மறுநாள் அதிகாலை 3:45 மணி சேவையைத் துவக்க வேண்டும்.
ஆனால், தனியார் பஸ்கள், இரவு நேரத்தில், கிராமங்களுக்கு வந்தடைந்தால், மீண்டும் நகருக்கு சென்று திரும்புவதில்லை. அதேபோல, பஸ் ஸ்டாண்டில், இரவு 8:00 மணிக்கு மேல் அரசு டவுன் பஸ்களின் இயக்கமும் குறைந்துவிடுவதால், அந்தந்த ஊர்களுக்கு செல்லும் பஸ் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால், வெளியூர் சென்று திரும்புவோர், ஏமாற்றம் அடைகின்றனர். இரவு நேரத்தில் தனியார் பஸ்களின் இயக்கத்தை முறைபடுத்தி கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.