/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
/
அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : ஏப் 14, 2025 05:30 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர் தினம் மற்றும் பாராட்டு விழா நடந்தது.
பொள்ளாச்சி அருகே, கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒவ்வொரு கல்வியாண்டு இறுதியிலும் மாணவர்களின் கல்வித்தரம், மேம்பாடு, வருகை, தனிநபர் சமூக செயல்பாடு, ஒழுக்க நெறி, சமூகப்பணிகள் போன்ற கூறுகள் ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது.
கல்வியாண்டு இறுதியில், முதலிடம் பெறும் மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான விழா நடந்தது.
தமிழ், ஆங்கில நாளேடு வாசிப்பு திறன், முதன்மை மாணவர், பொது அறிவு உள்ளிட்டவைகளில் முதலிடம் பிடித்த ஐந்தாம் வகுப்பு மாணவி காவியஸ்ரீ, மாணவர் ஹரிஷ் ஆகியோர் பரிசு பெற்றனர்.
பொது அறிவில் நான்காம் வகுப்பு தெபோராள், சிந்தனை திறனில் முதல் வகுப்பு மாணவி சமிக் ஷா ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார். மண்ணுார் (முன்னாள்) ஊராட்சி துணை தலைவர் புரவலர் ரங்கசாமி ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.
ஆசிரியர் பயிற்றுநர் சுகந்திலட்சுமி, மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பள்ளி ஆசிரியர் சத்தியா, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

