/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்பந்து போட்டியில் வென்ற அணிக்கு பரிசு
/
கால்பந்து போட்டியில் வென்ற அணிக்கு பரிசு
ADDED : நவ 19, 2024 08:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சாமியாண்டிப்புதுார் ரைஸ் மெட்ரிக் பள்ளியில், பள்ளி அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடத்தப்பட்டது. நான்காம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்ற போட்டியில், 4 பள்ளி அணிகள் பங்கேற்றன.
அதில் ரைஸ் மெட்ரிக் பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர். தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி நிறுவனர்கள் கிருஷ்ணன், கீதா, பள்ளித் தாளாளர் பிரசன்னா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். பள்ளி ஆலோசகர் எஸ்.கிருஷ்ணன், திட்ட இயக்குனர் ஹிட்டாசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.