/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்றல் திறனை மேம்படுத்த 'மகிழ் முற்றம்' சார்பில் பரிசு
/
கற்றல் திறனை மேம்படுத்த 'மகிழ் முற்றம்' சார்பில் பரிசு
கற்றல் திறனை மேம்படுத்த 'மகிழ் முற்றம்' சார்பில் பரிசு
கற்றல் திறனை மேம்படுத்த 'மகிழ் முற்றம்' சார்பில் பரிசு
ADDED : நவ 29, 2024 11:01 PM
வால்பாறை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்கள் நலனுக்காகவும், தலைமை பண்பை வளர்க்கும் வகையிலும், 'மகிழ் முற்றம்' எனும் மாணவர் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த குழுவின் சார்பில் கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மெல்வின்பால் (10ம் வகுப்பு), கோகுல் கிருஷ்ணன் (பிளஸ் 1), ஐஸ்வர்யா (பிளஸ் 2) ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில், ஆசிரியர்கள் பரிசு வழங்கி பாராட்டி பேசினர்.
விழாவில், மகிழ்முற்றம் மாணவர் அமைப்பின் தலைவர்கள் டெய்சிலீமா, கவுரி, சுப்புராஜ், வசந்த், தனபாக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.