/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு
/
அரசு பள்ளி மாணவியருக்கு அறக்கட்டளை சார்பில் பரிசு
ADDED : ஜூன் 09, 2025 10:00 PM

வால்பாறை; பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிகளுக்கு, அறக்கட்டளை சார்பில் பரிசு வழங்கபட்டது.
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவியர் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவியரை பாராட்டும் வகையில், சென்னையை சேர்ந்த அரசு பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சார்பில் துவங்கப்பட்ட அறக்கட்டளை சார்பில், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அனுபிரபா, பாவனா, ரிதன்யா ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி முன்னிலையில், அறக்கட்டளை உறுப்பினர் அதிசயமணி பரிசுத்தொகை வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள், மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.