/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி, விளையாட்டில் சிறப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு
/
கல்வி, விளையாட்டில் சிறப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு
கல்வி, விளையாட்டில் சிறப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு
கல்வி, விளையாட்டில் சிறப்பு மாணவ, மாணவிகளுக்கு பரிசு
ADDED : அக் 30, 2024 11:44 PM

கருமத்தம்பட்டி ; கல்வி, விளையாட்டில் சாதித்த, வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வாகராயம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 900 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். முதல் காலாண்டில், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
மாணவர்களை பாராட்டி, பரிசுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வழங்கினர். பரிசு பெற்ற மாணவர்களை போல், அடுத்த காலாண்டில் மற்ற மாணவர்களும் சிறப்பிடம் பெற, கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும், என, ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.