/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு
/
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பரிசு
ADDED : ஆக 16, 2025 09:24 PM
கோவை; மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணிபுரிந்த துாய்மை பணியாளர்கள், 10 பேருக்கு வெகுமதியாக ரூ.2,000ம், சிறந்த முறையில் பணிபுரிந்த அலுவலர், பணியாளர்கள், 127 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மேயர் வழங்கினார்.
மாநகராட்சி பள்ளிகளில் கடந்த, 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ்2 பொதுத் தேர்வில் பாடங்களில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், 22 பேர், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, 12 பேர், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்கள், 185 பேர் என, 501 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிளஸ்2 பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஆர்.எஸ்.புரம்(மேற்கு) மாநகராட்சி பெண்கள் பள்ளி, பத்தாம் வகுப்பில், 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய ஒக்கிலியர் காலனி மாநகராட்சி பள்ளி, புலியகுளம் பெண்கள் பள்ளிகளுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
இதில், 11 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், 54 பேர் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியது, வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்தது. நிறைவில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.