/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறகு பந்து போட்டி வென்றவர்களுக்கு பரிசு
/
இறகு பந்து போட்டி வென்றவர்களுக்கு பரிசு
ADDED : ஜன 20, 2024 12:06 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே டி. நல்லிக் கவுண்டன்பாளையம், தாளக்கரை இறகுப்பந்து குழு சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆறாம் ஆண்டு இரட்டையர் பிரிவு வெளியரங்கு இறகுபந்து போட்டி நடந்தது.
அதில், 17 வயதுக்கு கீழ் ஜூனியர் பிரிவில், எட்டு அணிகள் பங்கேற்றன. முதல் பரிசை மணிகண்டன் மற்றும் வினீத் ஜோடியும், இரண்டாம் பரிசை கவின், தீபக் ஜோடியும் வென்றது.
பெரியவர்களுக்கான பிரிவில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றனர். முதல் பரிசை, ராஜகோபாலன்,- சுந்தர் ஜோடியும், இரண்டாம் பரிசை பிரதீஸ், நந்தகுமார் ஜோடியும் வென்றது.
வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றோருக்கு கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார். வடக்கு ஒன்றிய துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்