/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையை விரிவுபடுத்தாமல் மையத்தடுப்பு வைத்ததால் சிக்கல்
/
சாலையை விரிவுபடுத்தாமல் மையத்தடுப்பு வைத்ததால் சிக்கல்
சாலையை விரிவுபடுத்தாமல் மையத்தடுப்பு வைத்ததால் சிக்கல்
சாலையை விரிவுபடுத்தாமல் மையத்தடுப்பு வைத்ததால் சிக்கல்
ADDED : டிச 04, 2025 06:38 AM

வால்பாறை: வால்பாறையில், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்திய பின் மையத்தடுப்பு அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வால்பாறையில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளும், வாகனங்களும் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
இதை தவிர்க்க, போஸ்ட் ஆபீஸ் முதல் ஸ்டேன்மோர் சந்திப்பு வரை ரோட்டின் மத்தியில் தடுப்பு அமைக்க வேண்டும். காந்திசிலை அருகில் மக்கள் நடந்து செல்லக்கூட வழியில்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ள மையத்தடுப்புகளை போலீசார் அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை, காந்திசிலை அருகே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரோட்டின் நடுவே வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை போலீசார் அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ஆக்கிமிப்புக்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்.
அதன்பின், ரோட்டை விரிவுபடுத்தி விபத்துக்களை தவிர்க்க, மையத்தடுப்பு அமைக்க வேண்டும். சுற்றுலா வாகனங்கள் நிறுத்த தனி பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்.
ரோட்டில் விதிமுறையை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துபவர்களை கண்டறிந்து, போலீசார் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

