/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிமென்ட் துகள்களால் பிரச்னை; குரும்பபாளையம் மக்கள் புகார்
/
சிமென்ட் துகள்களால் பிரச்னை; குரும்பபாளையம் மக்கள் புகார்
சிமென்ட் துகள்களால் பிரச்னை; குரும்பபாளையம் மக்கள் புகார்
சிமென்ட் துகள்களால் பிரச்னை; குரும்பபாளையம் மக்கள் புகார்
ADDED : செப் 05, 2025 10:38 PM

கோவை; மதுக்கரை அருகே குரும்ப பாளையத்தில் 5,000 குடியிருப்புகள் உள்ளன. இதற்கு மத்தியில், சிமென்ட் தொழிற்சாலை 24 மணி நேரமும் இயங்குகிறது. உற்பத்தியின்போது வெளியேறும் சிமெண்ட் துகள் காற்றில் பறக்கிறது. வீட்டு மேற்கூரை, மரங்களில் உள்ள இலை, வாகனங்கள், ஓட்டு வீடு ஆகியவை மீது சிமென்ட் துகள் படிந்து பச்சை நிறத்துக்கு மாறி விட்டன.
சிமென்ட் துகள் காற்றுடன் கலந்திருப்பதால், அவற்றை சுவாசிக்கும் மக்களுக்கு ஆஸ்துமா, சுவாசக்கோளாறு, அலர்ஜி ஏற்படுகிறது. வயோதிகர்கள் சுவாச பிரச்னையில் சிக்கி தவிக்கின்றனர். கலெக்டரிடம் அப்பகுதி பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து, மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் கார்த்திக், குரும்பபாளையத்தில் ஆய்வு செய்தார். குரும்பபாளையம் மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில் உள்ள ராமண்ணன் தோட்டம், கருப்பராயன், விநாயகர் கோவில் வீதி, ஒளவையார், பாரதியார், சுப்ரமணியர், நேதாஜி வீதிகளில் சிமென்ட் துகள்கள் படிந்துள்ளன. சுவாசப் பிரச்னை அதிகரித்து வருகிறது. குரும்ப பாளையம் மக்கள் உயிர் வாழ வேண்டுமெனில், சிமென்ட் ஆலை இயங்க தடை விதிக்க வேண்டும்' என்றனர்.