/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு தேடி ரேஷன் பொருள் வழங்குவதில் சிக்கல்; 'நெட் ஒர்க்' பிரச்னையால் மாற்று ஏற்பாடு
/
வீடு தேடி ரேஷன் பொருள் வழங்குவதில் சிக்கல்; 'நெட் ஒர்க்' பிரச்னையால் மாற்று ஏற்பாடு
வீடு தேடி ரேஷன் பொருள் வழங்குவதில் சிக்கல்; 'நெட் ஒர்க்' பிரச்னையால் மாற்று ஏற்பாடு
வீடு தேடி ரேஷன் பொருள் வழங்குவதில் சிக்கல்; 'நெட் ஒர்க்' பிரச்னையால் மாற்று ஏற்பாடு
ADDED : அக் 07, 2025 09:04 PM

வால்பாறை; தாயுமானவர் திட்டத்தில் 'பாயின்ட் ஆப் சேல்' கருவி வாயிலாக, எஸ்டேட் பகுதியில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுளுக்கு, 42 ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. கைரேகை பதிவு மற்றும் கருவிழி பரிசோதனை வாயிலாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும், எடை குறையாமலும், முறைகேடுகள் நடக்காமல் இருக்கவும் 'பாயின்ட் ஆப் சேல் ' கருவி வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு ரேஷன் பொருட்கள் நேரில் வழங்கும் திட்டம் கடந்த மாதம் துவக்கப்பட்டது.
அதன் அடிப்டையில், வால்பாறையில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக முதியோர் மற்றும் மாற்றுத்திறாளிகள் வீடுகளை கண்டறிந்து, நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் நேற்று முன்தினம் வீடுதேடி வழங்கப்பட்டன.
ஆனால், வால்பாறை நகரை தவிர பிற பகுதியில் 'நெட் ஒர்க்' பிரச்னையால், 'பாயின்ட் ஆப் சேல்' வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிவில் சப்ளை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'வால்பாறை தாலுகாவில் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 1,063 பயனாளிகள் உள்ளனர். அவர்களின் வீட்டிற்கு சென்று, ரேஷன் கடை பணியாளர்கள், அத்தியாவசியப்பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
எஸ்டேட் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில் 'நெட் ஒர்க்' பிரச்னையால் 'பாயின்ட் ஆப் சேல்' வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை உள்ளது. எனவே எஸ்டேட் பகுதியில் மட்டும் கைரேகை மற்றும் கருவிழி பதிவு செய்த பின், தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்,' என்றனர்.