விடுதிகளில் உள்ளவர்களுக்கு சாப்பாடு வழங்குவதில் சிக்கல்
விடுதிகளில் உள்ளவர்களுக்கு சாப்பாடு வழங்குவதில் சிக்கல்
ADDED : மார் 14, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
கோவை: வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து உயர்கல்வி மற்றும் தொழில் நிமித்தமாக கோவைக்கு வருவோர் தனியார் விடுதிகளில் தங்கி உள்ளனர்.
மாவட்டத்தில் 800க்கு மேற்பட்ட விடுதிகள் செயல்படுகின்றன. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக விடுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“எங்கள் சங்கத்தில் 300 விடுதிகள் உள்ளன. சிலிண்டர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தங்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே அரசு தலையிட்டு விடுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர் வழங்க வேண்டும்,” என்று கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர்ஸ் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
