'குறு, சிறு நிறுவனங்களுக்கு நிலுவை வைத்தால் சிக்கல்
'குறு, சிறு நிறுவனங்களுக்கு நிலுவை வைத்தால் சிக்கல்
ADDED : மார் 28, 2026 05:02 PM
கோவை: எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களிடம் சரக்கு அல்லது சேவை பெற்றதற்கான தொகையை 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும். இதனை உறுதி செய்ய தொழில்முனைவோர்களுக்கான வருமான வரிச் சட்டம் 43 பி (ஹெச்) பிரிவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இச்சட்டத்தின்படி, வரும் 31ம் தேதிக்குள் குறு, சிறு, நிறுவனங்களுக்கான தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில் அத்தொகைக்கு வரிச் சலுகையைக் கோர முடியாது.
எழுத்துபூர்வ ஒப்பந்தம் இருந்தால், இன்வாய்ஸ் தேதியில் இருந்து 45 நாட்கள், இல்லை என்றால் 15 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், 43 பி (ஹெச்) பிரிவின் கீழ் நீங்கள் வர நேரிடும். குறு, சிறு நிறுவனங்களுக்கு மட்டுமே இவ்விதி பொருந்தும். மொத்த விற்பனை அல்லது சில்லறை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் 'உத்யம்' பதிவு பெற்றிருந்தாலும், அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏப். 1 அல்லது அதற்கு பிறகு செலுத்தினால் அத்தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரி சலுகை அடுத்த நிதியாண்டில்தான் கோர முடியும். எனவே, நிலுவை தொகையை 31க்குள் செலுத்துங்கள், என ஆடிட்டர் ஜலபதி கூறியுள்ளார்.
