/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்கள் எப்.சி., பெறுவதில் சிக்கல்; வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அவதி
/
வாகனங்கள் எப்.சி., பெறுவதில் சிக்கல்; வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அவதி
வாகனங்கள் எப்.சி., பெறுவதில் சிக்கல்; வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அவதி
வாகனங்கள் எப்.சி., பெறுவதில் சிக்கல்; வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அவதி
ADDED : ஆக 14, 2025 09:03 PM

பெ.நா.பாளையம்; சரக்கு வாகனங்கள் எப்.சி., பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால்,25க்கும் மேற்பட்ட வாகனங்கள் எப்.சி., செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டன.
கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம் துடியலூர் அருகே வெள்ளக்கிணர் ரோட்டில் உள்ளது. இந்த அலுவலகத்தில் எப்.சி., சான்றிதழ் பெற, 40க்கும் மேற்பட்ட பொது சரக்கு வாகனங்கள் காலை, 9:00 மணி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மதியம், 2:00 மணி வரை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் உள்ள எந்த ஒரு அதிகாரியும் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பொது சரக்கு வாகனங்களை உரிய ஆய்வு செய்யவில்லை. மதியம் 2:00 மணிக்கு பிறகு வாகனங்கள் எப்.சி., செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டன.
இது குறித்து பொது சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் கூறுகையில்,' இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் அரசு விடுமுறை. எப்.சி., பெறாத பொது சரக்கு வாகனங்களை சாலைகளில் இயக்க முடியாது. இதனால் தனிப்பட்ட முறையில் பொது சரக்கு வாகன உரிமையாளர்களுக்கு நஷ்டம். மீறி இயக்கி விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால், வாகன உரிமையாளர்களே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்' என்றனர்.
இது குறித்து, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் கூறுகையில், 'வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மோட்டார் ஆய்வாளர் ஒருவர் விடுமுறை என்பதால், தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து ஆய்வாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டு எப்.சி., பணி நடந்தது' என்றார்.