/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் விலை ரூ.3 குறைப்பு உற்பத்தியாளர் சங்கம் தகவல்
/
இளநீர் விலை ரூ.3 குறைப்பு உற்பத்தியாளர் சங்கம் தகவல்
இளநீர் விலை ரூ.3 குறைப்பு உற்பத்தியாளர் சங்கம் தகவல்
இளநீர் விலை ரூ.3 குறைப்பு உற்பத்தியாளர் சங்கம் தகவல்
ADDED : அக் 14, 2025 12:26 AM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையுடன் ஒப்பிடுகையில், மூன்று ரூபாய் குறைக்கப்பட்டு, 34 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 15,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநீர் வரத்து கணிசமாக உயர்ந்து வருகிறது. தட்பவெப்ப நிலை மாற்றம், தமிழகத்தின் பல பகுதிகளில் மழை, இளநீர் வரத்து உயர்வு காரணமாக, விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக தேங்காய் விலை உயர்ந்து வருகிறது. விவசாயிகள், மிக குறைந்த விலைக்கு இளநீர் விற்க வேண்டாம். இரண்டில் இருந்து மூன்று குலைகள் வரை அறுவடை செய்யாமல் விட்டாலும் இளநீரின் மகசூலில் பாதிப்பு ஏற்படாது. அந்த குலைகள், தேங்காயாக மாறும்போது கிலோ, 70 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.