/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாட்டின் பொருளாதாரம் வளர பொருட்களின் தரம் முக்கியம்'
/
'நாட்டின் பொருளாதாரம் வளர பொருட்களின் தரம் முக்கியம்'
'நாட்டின் பொருளாதாரம் வளர பொருட்களின் தரம் முக்கியம்'
'நாட்டின் பொருளாதாரம் வளர பொருட்களின் தரம் முக்கியம்'
ADDED : ஜன 13, 2024 01:52 AM
கோவை:இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் கோவை கிளைமற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி சார்பில், இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77வது நிறுவனநாள் விழா, கல்லுாரி கலையரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, அறிவியல் மற்றும் தொழில்துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மோகன் செந்தில்குமார் பேசுகையில், ''அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாக,இந்தியப் பொருட்கள் தரமிக்கதாக இருப்பது முக்கியம்,'' என்றார்.
தொடர்ந்து, இந்திய தரநிலைகள் பணியகத்தின் புகைப்படக் கண்காட்சி நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, வினாடி - வினா, பேச்சுப் போட்டி, விழிப்புணர்வு பதாகை தயாரித்தல் போட்டிகள் நடந்தன.
கல்லுாரி செயலர் வாசுகி, முதல்வர் லட்சுமணசாமி, இந்தியத் தரநிலைகள் பணியகத்தின், கோவை கிளையின் தலைவர் மற்றும் விஞ்ஞானி கோபிநாத், விஞ்ஞானி கவின், பொறியாளர் திவ்யப்பிரபா ஆகியோர் பங்கேற்றனர்.