ADDED : ஜூலை 08, 2025 08:55 PM
பொள்ளாச்சி; மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இன்று முதல் 15ம் தேதி வரை, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் 15ம் தேதி உலக இளைஞர் திறன் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், மகளிர், கலை, அறிவியல், பொறியியல் கல்லுாரி, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிலைய மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி, போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் பதிவு செய்தல், மென்பாடங்களை தரவிறக்கம் செய்தல், கல்வி தொலைக்காட்சி மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்தும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், நடத்தப்படுகின்றன.
மேலும், விபரங்களுக்கு, 0422 2642388 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.