/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் போராட்டம்
ADDED : பிப் 28, 2024 02:16 AM
கோவை:
அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்கள் பணி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லுாரி கல்வி இணை இயக்குனரகம் அலுவலகத்தை, நேற்று பேராசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில், பணி மேம்பாடு பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், எம்.பில்., பி.எச்டி., படிப்புக்கான ஊக்க ஊதியம், பேராசிரியர் பணி மேம்பாடு உள்ளிட்ட ஏழு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஒருங்கிணைந்த சங்க மண்டல செயலாளர் சரவணக்குமார் கூறுகையில், '' பல்கலை ஆசிரியர் சங்கம், மூட்டா, இணைந்து பல கட்ட போராட்டம் நடத்தியும், பலன் இல்லை.
அரசு கல்லுாரிகளுக்கு அனைத்தும் செய்யும் அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரி பேராசிரியர்களை, மாற்றாந்தாய் போன்று நடத்துகிறது. கோரிக்கை நிறைவேறும் வரை, பல்வேறு கட்ட போராட்டங்களை தொடரவுள்ளோம்,'' என்றார்.

