/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுவோரை ஆபத்தான இடங்களுக்கு கூட்டிச்செல்ல தடை
/
போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுவோரை ஆபத்தான இடங்களுக்கு கூட்டிச்செல்ல தடை
போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுவோரை ஆபத்தான இடங்களுக்கு கூட்டிச்செல்ல தடை
போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுவோரை ஆபத்தான இடங்களுக்கு கூட்டிச்செல்ல தடை
ADDED : அக் 26, 2025 07:42 PM
கோவை: போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியரை முழு கண்காணிப்பில் வைத்திருந்து, பாதுகாப்புடன் அழைத்து வர, அணி மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை சார்பில், 2025-26ம் கல்வி ஆண்டுக்கான வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், நேரு ஸ்டேடியம் மற்றும் தனியார் கல்லுாரிகளில் நடந்துவருகின்றன. வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடக்கிறது.
தடகளம், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளுக்கு மாணவ, மாணவியரை அழைத்து செல்லவும், வழிநடத்தவும், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் அணி மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயணத்தின்போது காலாவதியான, ஒவ்வாத உணவு சாப்பிடுதல், போட்டி முடிந்து திரும்பும்போது சுற்றுலா செல்லுதல், நீர் நிலைகளில் குளித்தல் போன்ற சமயங்களில் விபத்து காரணமாக வீரர், வீராங்கனைகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க, பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க அணி மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநில அளவில் நடக்கும் தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு அணியின் மேலாளராக, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரால் நியமிக்கப்படும் நபர்கள் மட்டுமே செயல்பட வேண்டும்.
அணி மேலாளர்கள் தங்களின் பணி ஒதுக்கீட்டு ஆணை மற்றும் துறை சார்ந்த அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
போட்டி நடக்கும் இடங்களில், மாணவர்களை தமது முழு கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'மாணவர்களின் பாதுகாப்பு
மேலாளர்களின் பொறுப்பு'
கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கூறியதாவது: மாணவர்களின் பாதுகாப்பு, அணி மேலாளர்களின் முக்கிய கடமை. நீர் நிலைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் ஆபத்தான இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். விலை உயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது. மழைக்காலமாக இருப்பதால், படுக்கை மற்றும் போர்வை வசதிகளை மாணவர்களே கொண்டுவர வேண்டும். மாணவியரின் அணி மேலாளராக பெண் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே இருக்க வேண்டும். கட்டாயமாக பெற்றோருக்கு அனுமதி இல்லை. மாணவ, மாணவியர் தங்கும் இடத்தில் அணி மேலாளர்கள் தங்கி, மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

