/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனி தொழிற்ேபட்டை வாக்குறுதி; கிரில் தயாரிப்பாளர்கள் கேள்வி
/
தனி தொழிற்ேபட்டை வாக்குறுதி; கிரில் தயாரிப்பாளர்கள் கேள்வி
தனி தொழிற்ேபட்டை வாக்குறுதி; கிரில் தயாரிப்பாளர்கள் கேள்வி
தனி தொழிற்ேபட்டை வாக்குறுதி; கிரில் தயாரிப்பாளர்கள் கேள்வி
ADDED : ஜூலை 22, 2025 06:29 AM
கோவை; கிரில் தயாரிப்பு தொழிலுக்கு தனி தொழிற்பேட்டை அமைத்துத் தருவதாக, தொழிற்துறை அமைச்சர் ராஜா அளித்த வாக்குறுதியை, நிறைவேற்றித் தர வேண்டும் என, கோவை மாவட்ட கிரில் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சங்க தலைவர் ரவி அறிக்கை:
கிரில் பேப்ரிகேஷன் தொழிலுக்கு தனி தொழில்பேட்டை கோரி, 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். 2015ல், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றித் தருகிறோம் என வாக்குறுதி அளித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலின்போது, தனித் தொழிற்பேட்டை அமைத்துத் தருவதாக 2024 ஏப்., 16ம் தேதி தொழில்துறை அமைச்சர் ராஜா உறுதி அளித்தார்.
அதை நிறைவேற்றித் தர வேண்டும். விசைத்தறி தொழில்களுக்கு வழங்குவதைப் போல, 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். 12 கிலோவாட்டுக்கும் குறைவான மின் இணைப்பை பயன்படுத்துவோருக்கு, 3ஏ1 கட்டண விகிதத்துக்கு மாற்றித் தருவது தொடர்பாக, மின் வாரியத்துக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கிரில் தொழிலாளர்களுக்கு, தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஆங்கிள் பைப் ரூபிங் சீட் ஏற்றி வரும் வாகனங்களை போக்கு வரத்து காவல் துறை வழிமறித்து, அபராதம் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் பிட்டர், வெல்டர், சீட் மெட்டல் ஒர்க்கர் பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களை, எங்கள் தொழிலகங்களுக்கு அப்ரன்டிஸ் பயிற்சிக்கு அனுப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.