ADDED : அக் 25, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சென்னை தெற்கு மண்டல போக்குவரத்துத்துறை இணை கமிஷனராக இருப்பவர் அழகரசு. இவர் கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை கமிஷனராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கூடுதலாக இந்த பொறுப்பை கவனித்துக்கொள்வார்.
கோவையில் பணிபுரிந்து வந்த போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன், போக்குவரத்துத்துறை கூடுதல் கமிஷனராக, பதவி உயர்வு பெற்று சென்றதையடுத்து, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.