sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையிலிருந்து நாடு முழுதும் மின்சார சக்தியுடன் மைனிங் லாரிகளில் புரட்சி நிகழ்த்தும் புரொபெல்

/

கோவையிலிருந்து நாடு முழுதும் மின்சார சக்தியுடன் மைனிங் லாரிகளில் புரட்சி நிகழ்த்தும் புரொபெல்

கோவையிலிருந்து நாடு முழுதும் மின்சார சக்தியுடன் மைனிங் லாரிகளில் புரட்சி நிகழ்த்தும் புரொபெல்

கோவையிலிருந்து நாடு முழுதும் மின்சார சக்தியுடன் மைனிங் லாரிகளில் புரட்சி நிகழ்த்தும் புரொபெல்


ADDED : செப் 30, 2025 10:49 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ல்துறைகளின் பெருமைமிகு தொழில் மரபை கொண்ட தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை, இப்போது, சுரங்கம் மற்றும் போக்குவரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முக்கிய மையமாக மாறியுள்ளது.

கோவையைச் சேர்ந்த புரொபெல் இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் முன்னணி கிரஷிங், ஸ்கிரீனிங் மற்றும் வாஷிங் உபகரண உற்பத்தியாளராக மட்டுமின்றி, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்தியுள்ளது. தற்போது உள்நாட்டில் லாரி உற்பத்தியில் தனது அடையாளத்தை விரிவாக்கியுள்ளது.

60 ஆண்டு பழமையான ஏ.வி., குழுமத்தின் ஆதரவுடன், புரொபெல் இந்தியாவின் ஹெவி-டியூட்டி போக்குவரத்து துறையை மாற்றி அமைத்து வருகிறது. துணிச்சலான தொலைநோக்கு பார்வையாக துவங்கி, இன்று முன்னணி சுரங்க மற்றும் கட்டுமான நிறுவனங்களால் நம்பப்படும் பிராண்டாக மாறியுள்ளது. அதிநவீன உள்ளக ஆராய்ச்சி மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தி திறன்கள் வாயிலாக புரொபெல் லாரிகளை தயாரிப்பது மட்டுமின்றி, இந்தியாவின் கடுமையான சுரங்க மற்றும் குவாரி பகுதிகளில் சிறப்பாக செயல்படக்கூடியதாக அவற்றை வடிவமைக்கிறது.

புரொபெல் பயணம், புரொபெல் 470 எம்.இ.வி., (6x4 டிப்பர்) லாரியின் அறிமுகத்துடன் துவங்கியது. இது, கல் குவாரி பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இந்த நவீன மின்சார லாரிகளின் முதல் தொகுதி தமிழ்நாட்டின் முன்னணி புளூ மெட்டல் உற்பத்தியாளர்களில் மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. அவை தங்கள் செயல்திறனையும் நம்பகத்தன்மையையும் அதி விரைவாக நிரூபித்தன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு புரொபெல் தனது 470 எச்.இ.வி - 8x4 ஹெவி டியூட்டி கனரக மின்சார சுரங்க டிப்பர் மூலம் அதன் சந்தையை விரிவுப்படுத்தியது. இந்த மாடல் ஹோமோலோகேஷன் சான்றளிக்கப்பட்டது மற்றும் சாலையில் இயக்கவும் உரிமம் பெற்றது. சுரங்க ஆபரேட்டர்களுக்கு சுரங்க தளங்களுக்கும் பொது சாலைகளுக்கும் இடையில் தடையின்றி நகரும் சுதந்திரத்தை இது அளிக்கிறது. வேலையில்லா நேரம் மற்றும் தளவாட செலவுகளைக் குறைக்கிறது.

புள்ளிவிபரங்களின் படி, 160க்கும் மேற்பட்ட புரொபெல் லாரிகள் இந்தியாவெங்கும் செயல்பட்டு வருகிறது. இந்த வாகனங்கள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 20 மணி நேர செயல்பாட்டை பதிவு செய்து, அவற்றின் ஆயுள் மற்றும் நிலைத்தன்மையை நிரூபிக்கின்றன. 90 சதவீதம் மீண்டும் வாங்கும் அளவுக்கு செயல்பாடு உள்ளதால், வாடிக்கையாளரின் நம்பிக்கை வெளிப்படுகிறது. இது லாரிகளின் தரம், நம்பகத்தன்மை மற்றும் செலவு-திறன் ஆகியவற்றை உணர்த்துகிறது.

ஒவ்வொரு புரொபெல் டிரக்கின் மையத்திலும் அதன் சக்திவாய்ந்த டிரைவ் ட்ரெய்ன் உள்ளது. சக்திவாய்ந்த 350 கிலோ வாட் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 350கிலோவாட் பேட்டரி உள்ளது. இது ஒரு மணி நேரத்தில் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் ஆகிறது. இந்தியாவில் மிகவும் உயர்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் 5,000 சுழற்சிகள் / 5 ஆண்டு பேட்டரி உத்தரவாதத்துடன் வாடிக்கையாளர்களுக்கு புரொபெல் மேலும் உறுதியளிக்கிறது.

புரொபெல் இப்போது டிராக்டர் -டிரெய்லர் பிரிவில் புதிய 470 இ டி.ஆர். மாதிரியுடன் நுழைகிறது. நிலைபாடான பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு, பல தொழில்நுட்ப முதன்மை அம்சங்களுடன், 470இ டி.ஆர் ஹெவி -டியூட்டி எலக்ட்ரிக் லாஜிஸ்டிக்ஸை சாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் மாற்றத் தயாராகி உள்ளது.

புரொபெலின் நோக்கம் வெறும் லாரிகளை உருவாக்குவது மட்டுமல்ல. இது, சுரங்கம் மற்றும் லாஜிஸ்டிக் துறைகளில் நிலையான, மின்சார போக்குவரத்தில் எதிர்காலத்தில் இந்தியாவை முன்னிலை வகிக்கும் நோக்கம் கொண்டது. வலுவான அடித்தளம், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் வெற்றியை மையமாகக் கொண்டு, அடுத்த தலைமுறைக்கான சுரங்கம் மற்றும் போக்குவரத்திற்கு சக்தி அளிக்கும் புரட்சியை செய்து வருகிறது.






      Dinamalar
      Follow us