/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாதநோய்க்கு முறையான சிகிச்சை மிகவும் அவசியம்'
/
'வாதநோய்க்கு முறையான சிகிச்சை மிகவும் அவசியம்'
ADDED : அக் 25, 2024 10:25 PM
''மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை பிற்காலத்தில், சிதைவு ஏற்பட்டு, கை கால்கள் வளைந்து போக வாய்ப்புள்ளது,'' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை ருமடாலஜி (வாத நோய்) நிபுணர் டாக்டர் சிவகுமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் நமது உடலுக்கு எதிராக செயல்படும்போது, ஏற்படும் பதிப்புகளை தன்னெதிர்ப்பு நோய்கள் என்கிறோம். இதில் பல நோய்கள் இருந்தாலும், பொதுவான ஒன்றாக அறியப்படுவது, சரவாங்கி மூட்டுவாதம் அல்லது முடக்குவாதம் ஆகும்.
இதில் வயது மூப்பு காரணமாக, எலும்பு மூட்டுகள் தேய்வதால் வரும் பாதிப்பு, ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் எனப்படுகிறது. பொதுவாக அனைவரும் அறிந்த இன்னொரு வகை, சொரியாசிஸ் ஆர்த்ரைட்டிஸ். இது சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும்.
மற்றொன்று, முதுகு தண்டுவாதம். இப்பாதிப்புக்குள்ளானோருக்கு முதுகு மற்றும் கழுத்து, மூட்டு பகுதிகளில் வலி ஏற்படும். யூரிக் அமிலம் பிரச்னையால் ஏற்படும் கீழ்வாதமும், ஒரு வகையான வாத நோய்தான்.
கை மற்றும் கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் ஏற்படுவதே இதன் அறிகுறியாகும். காலையில் எழுந்ததும், கை கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது.
சர்க்கரை, இருதய அடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை பற்றி பரவலாக இருக்கும் விழிப்புணர்வை போல் ஆர்த்ரைட்டிஸ் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை.
மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை, கண்டுகொள்ளாமல் விடும்போது அவை பிற்காலத்தில், சிதைவு ஏற்பட்டு, கை கால்கள் வளைந்து போக வாய்ப்புள்ளது; இதை சரிசெய்வது கடினம்.
ஆரம்பத்திலேயே பிரச்னைகளை கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற்றால், பாதிப்புகளை தவிர்க்க முடியும். வாத நோய் 2 வயதில் இருந்து, எந்த வயதினருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்களுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.
பாதிப்பு உள்ளவர்கள், ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
பழங்கள், காய்கறி அதிகம் உட்கொள்ள வேண்டும். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகள், துரித உணவு தவிர்க்க வேண்டும்.
கே.எம்.சி.எச்.,ல், முடக்கு வாதத்துக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, 98940 08800, 0422 432 4151 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.