ADDED : ஆக 28, 2026 05:11 PM
கோவை: அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கும் பிராப்பர்டி எக்ஸ்போ 2026 நடக்கிறது. நேற்று துவங்கிய எக்ஸ்போ, காலை 10 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், டெவலப்பர்கள் பங்கேற்றுள்ளனர். வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வில்லாக்கள், வீடுகளுக்கு தேவையான பர்னிச்சர் சிறப்பு சலுகையில் வாங்கலாம்.
வீட்டுக் கடன், நிதி ஆலோசனை, திட்ட விவரங்கள், முதலீட்டு வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர். ஒரே இடத்தில் பல ரியல் எஸ்டேட் திட்டங்களை ஒப்பிட்டு சொத்தை தேர்வு செய்ய விரும்புவோர், முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இக்கண்காட்சி சிறந்த வாய்ப்பு.
கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது.
