ADDED : ஆக 28, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை நகரில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பின் சார்பில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும், ரக் ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.
வால்பாறை அரசு கல்லுாரி, நகராட்சி அலுவலகம், போலீஸ் ஸ்டேசன், தீயணைப்புதுறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, அமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கற்பகம், ராக்கி கயிறு அணிவித்து, இனிப்பு வழங்கினர். விழாவில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
