ADDED : ஜன 24, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
கோவை: பாங்க் ஆப் பரோடா சார்பில், பிராப்பர்ட்டி பேர்-2026 கண்காட்சி இன்றும், நாளையும் சுகுணா கல்யாண மண்டபத்தில் நடக்கிறது.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி தினேஷ்குமார் கூறுகையில், ''பாங்க் ஆப் பரோடா பிராப்பர்ட்டி கண்காட்சி நாளையும்(இன்று), நாளை மறுதினமும்(ஜன.24,25) நடக்கிறது. சிறந்த கட்டுமான நிறுவனங்கள், வீட்டுமனை, வீடு, வில்லாக்கள் உள்ளிட்ட குடியிருப்பு திட்டங்கள், கடன், முதலீடு வாய்ப்புகள் குறித்து அறியலாம். அனுமதி இலவசம். வீடு வாங்குபவர்களுக்கு சிறந்த வாய்ப்பு, '' என்றார்.
கண்காட்சியில் காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பொதுமக்கள் தகவல்களை பெறலாம். கண்காட்சியை சாய் அபிமான் ஏஜென்சி ஏற்பாடு செய்துள்ளது.
