/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., தொகை செலுத்த தவறிய தனியார் நிறுவன சொத்து ஜப்தி
/
பி.எப்., தொகை செலுத்த தவறிய தனியார் நிறுவன சொத்து ஜப்தி
பி.எப்., தொகை செலுத்த தவறிய தனியார் நிறுவன சொத்து ஜப்தி
பி.எப்., தொகை செலுத்த தவறிய தனியார் நிறுவன சொத்து ஜப்தி
ADDED : ஜூன் 24, 2025 12:09 AM
கோவை; கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம், தொழிலாளர்களுக்கான பி.எப்., தொகையை செலுத்த தவறியதால், அந்நிறுவனத்துக்கு சொந்தமான சொத்தை, பி.எப்., அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
கோவை மண்டல பி.எப்., நிறுவன மீட்பு அதிகாரி சுரேந்தர் குமார் அறிக்கை:
கோவையில், வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம், 1952ன் கீழ் பதிவு செய்யப்பட்ட, 'ஆதித்யா ஆட்டோமொபைல் ஸ்பேர்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம், 2021 ஜூலை முதல், 2023 பிப்., வரை தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய, 15 லட்சத்து, ஆறாயிரத்து, 192 ரூபாயை செலுத்த தவறி விட்டது.
அந்நிறுவனத்துக்கு போதுமான வாய்ப்பு வழங்கிய போதிலும், அதன் உரிமையாளர் செல்வகுமார், நிலுவைத் தொகையை செலுத்தத் தவறி விட்டார். அத்தொகையை வசூலிக்க, கோவை அனுப்பர்பாளையத்தில் உள்ள செல்வகுமார் மனைவி கார்த்திகா பெயரில் உள்ள சொத்தை, வருங்கால வைப்பு நிதி மீட்பு அமலாக்க அதிகாரி வேலு கையகப்படுத்தி உள்ளார். சொத்து மதிப்பீடு செய்தபின், பொது ஏலத்தில் விடப்பட்டு, நிலுவைத்தொகை வசூலிக்கப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.