/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொத்து வரியினங்களை நாளை முதல் செலுத்தலாம்
/
சொத்து வரியினங்களை நாளை முதல் செலுத்தலாம்
ADDED : ஏப் 03, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; யு.டி.ஐ.எஸ்., மென்பொருள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், கோவை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் உள்ள, வரி வசூல் மையங்கள் மற்றும் மண்டலத்துக்கு உட்பட்ட சேவைகள் இன்று (3ம் தேதி) வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிக்கான வரியினங்களை, நாளை (ஏப்., 4) முதல் வழக்கம்போல் செலுத்தலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.