/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுக்கு பணம் தரும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய யோசனை
/
ஓட்டுக்கு பணம் தரும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய யோசனை
ஓட்டுக்கு பணம் தரும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய யோசனை
ஓட்டுக்கு பணம் தரும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய யோசனை
ADDED : ஆக 16, 2025 10:31 PM

கோவை; ''தேர்தல் ஆணையம் ஜனநாயக படுகொலை செய்துள்ளது,'' என, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் கூறினார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆர்.டி.ஐ. வாயிலாக தகவல் கேட்டதில், கரூர், சேலம், பொள்ளாச்சி, பெரம்பலுார், திருநெல்வேலி தொகுதிகளில்கிடைத்த புகார்கள், நடவடிக்கைகள் குறித்து முழு தகவல்கிடைத்துள்ளது.
கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் முறைகேடு நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் அப்போது 1,000 பேருக்கு மேல் ஓட்டுக்கு பணம், பொருள் பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் 99 சதவீதம் புகார்கள் உண்மையல்ல என கூறி, உண்மையை மறைத்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய இரு நாட்களில் மட்டும் மிக அதிகமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.அனைத்தும் 100 சதவீதம் உண்மை உள்ள புகார்கள். அனைத்து புகார்களையும் மறைத்துஆணையம் ஜனநாயக படுகொலை செய்துள்ளது.
பணம் கொடுத்ததற்காக தேர்தலை தள்ளி வைத்தது தமிழகத்தில் மட்டும்தான், அதுவும் மூன்று முறை நடந்துள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் வந்த 112 புகார்களில், 58 புகார்கள் பணம் கொடுக்கப்பட்டதாகசொல்லப்பட்டவை. அவை உண்மை என்பதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அப்படி இருக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் புகார்களில் உண்மை இல்லை என ஆனையம் அப்படி கூறியது?
ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தலை தள்ளி வைப்பது மட்டுமே தீர்வாகாது. பணம் கொடுக்கும் வேட்பாளரைதகுதி நீக்கம் செய்ய வேண்டும். கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இதை அனைத்து அரசியல் கட்சியினரும் முன்னெடுக்க வேண்டும். அதற்கான மக்கள் குரல் கோவையில் இருந்து தொடங்கட்டும்.நாங்கள் ஆதாரங்களுடன் மீண்டும்தேர்தல் ஆணையத்திடம்புகார் அளிப்போம்;நடவடிக்கை இல்லையேல் நீதிமன்றம் செல்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.