தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவி பலாத்கார வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வாதம்

 மாணவி பலாத்கார வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வாதம்

 மாணவி பலாத்கார வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வாதம்


ADDED : பிப் 25, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில், மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அரசு தரப்பு வக்கீல் வாதிட்டார்.

பீளமேடு ஏர்போர்ட் பின்புறம், பிருந்தாவன்நகர் பகுதியில், கடந்த நவ. 2ம் தேதி இரவில், ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். பீளமேடு போலீசார் விசாரித்து, பலாத்காரத்தில் ஈடுபட்ட சதீஷ்,30, கார்த்திக்,21, குணா,20, ஆகியோரை காலில் சுட்டு பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சாட்சி விசாரணை நடக்கிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது கைதான மூவரிடம், குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதைதொடர்ந்து அரசு தரப்பு வக்கீல் ஜிஷா இறுதி வாதத்தை முன் வைத்தார். எதிர் தரப்பு வக்கீல் வாதிட வரும் 27க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us