/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலார் துறையில் சாதனை படைக்கும் புரோசன்
/
சோலார் துறையில் சாதனை படைக்கும் புரோசன்
ADDED : செப் 30, 2025 10:28 PM
பு ரோசன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில், சோலார் மின் உற்பத்தி துறையில் சாதனைகள் படைத்து வரும் நிறுவனமாகும். இவர்கள் தங்களுடைய நிறுவனத்திற்கு தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை டி.இ.டி.ஏ., அங்கீகாரம் மற்றும் ஐ.எஸ்.ஒ., 9001:2015 தரச்சான்றிதழ் பெற்றுள்ளனர். தரமான சோலார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுதல் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டர்களை சிறப்பான முறையில் தயாரித்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
வீடுகள், அபார்ட்மென்ட்கள், கல்யாண மண்டபங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் முதலான இடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்களை நல்ல முறையில் அமைத்துத் தருகிறார்கள். பிரதம மந்திரி சூரிய இல்லம் சோலார் மின்சாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மானிய தொகை ரூபாய் 78,000 வரை பெற்று அமைத்து தருகிறார்கள். சோலார் பேனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பவர்களுக்கு மின் கட்டணத்தில் மிகப்பெரிய தொகை வாழ்நாள் முழுவதும் மீதமாகும்.
விருப்பமுள்ளவர்களுக்கு புரோசன் நிறுவனத்தினர் சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கும், 6.5% குறைந்த வட்டியில் வங்கி கடன் பெற்றுத் தருகிறார்கள். நீங்கள் எளிய மாத தவணையில் பணம் செலுத்தலாம். உங்களுடைய பான் கார்டு மற்றும் மின் கட்டண ரசீதை வாட்ஸ் அப் செய்தால் செய்தால் தகுதி உள்ளவர்களுக்கு அவர்களே உடனடியாக வங்கி கடன் ஏற்பாடு செய்து உங்களுக்கு சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைத்து தருவார்கள்.
சிறப்பான முறையில் சூரிய மின் ஒளி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உண்டான தொழில் நுட்பம், கட்டுமானம் மற்றும் நிறுவுதல் வரையிலான அனைத்திலும் மிகச்சிறந்த அனுபவம் பெற்றுள்ளனர். வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த செலவில் மிகத்தரமான பொருட்களை தருவதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
புரோசன் நிறுவனத்தினர் சோலார் மின் உற்பத்தி நிலையத்தை உலக தரமான சோலார் பேனல்கள் மற்றும் உயர்தரமான பொருட்களைக் கொண்டு நல்ல முறையில் அமைத்துத் தருகிறார்கள். ஒழுகாமல் இருக்க ஜி.ஐ., கட்டுமானத்தில் பில்லர் போட்டு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்க்ரூ மூலம் இணைத்து துருப்பிடிக்காத வகையில் நீண்ட நாள் உழைக்கும் வகையிலும், பாதுகாப்பாக இருக்குமாறும் அமைத்து தருகிறார்கள்.
புரோசன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் தனவேல், சோலார் மற்றும் மரபு சாரா மின் உற்பத்தி துறையில் மிக நீண்ட கால அனுபவம் பெற்றுள்ளார். இவரது சிறப்பான நேரடி மேற்பார்வையிலும் நிர்வாகத்திலும் பல வகை அளவிலான திறன் கொண்ட நேர்த்தியான மின் உற்பத்தி நிலையங்கள் பல அமைத்துத் தரப்பட்டுள்ளன.
ஹுண்டாய், ராம்கோ, கற்பகம் பல்கலை, இந்துதான் கல்லூரி, அருண் மருத்துவமனை, அபிராமி மருத்துவமனை போன்ற பிரபல நிறுவனங்கள் இவர்களது வாடிக்கையாளர்களாக உள்ளனர். கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் நிறுவனம் அமைந்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99444 70098, 99444 70028 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.