/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிராமத்து மண்ணையும் மனிதர்களையும் காக்கணும்'
/
'கிராமத்து மண்ணையும் மனிதர்களையும் காக்கணும்'
ADDED : செப் 23, 2024 12:26 AM

கோவை : தமிழ்நாடு இலக்கிய பேரவை சார்பில், பேராசிரியர் குழந்தைசாமி எழுதிய, 'மேழி பிடிக்கும் கை' என்ற நுால் வெளியீட்டு விழா, கோவை பொதுப்பணித்துறை பொறியாளர் அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கவிஞர் பொன்முடி சுப்பையன் தலைமை வகித்தார். நுாலை தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் வெளியிட, எழுத்தாளர் ரங்க வள்ளியப்பன், பேராசிரியர் சுந்தரராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நுால் குறித்து, முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் பேசியதாவது:
பேராசிரியர் குழந்தைசாமி எழுதிய இந்த நுால், நான்கு கிராமத்து மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. கிராமத்தின் வாசனை இல்லாமல், ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வந்த மக்கள் எப்படி நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று உயர்ந்த நிலையை அடைந்தனர் என்பதை, பதிவு செய்து இருக்கிறார்.
அதே நேரத்தில், மண் வாசம் வீசிய கிராமங்கள் விவசாயத்தையும், இயற்கை வளத்தையும் இழந்து விட்டதையும், சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இன்றைக்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து இருந்தாலும், கிராமங்களும், உழவுத் தொழிலும், கூட்டு குடும்ப முறையும் அழிந்து போய் இருப்பதையும், அவற்றை காக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.