/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்
ADDED : செப் 24, 2024 11:53 PM

மேட்டுப்பாளையம் : துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்குதல் மற்றும் இலவச மருத்துவ முகாம் வெள்ளியங்காட்டில் நடைபெற்றது.
காரமடை அருகே உள்ள மருதுார், வெள்ளியங்காடு, காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், தோலம்பாளையம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, தனியார் ஊரக வளர்ச்சி மையம் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள், இணைந்து இலவச மருத்துவ முகாம் மற்றும் பணியின் போது பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, வெள்ளியங்காட்டில் உள்ள சமூக கூடத்தில் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்களுக்கு கண் பரிசோதனை, சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் ரோட்டரி பிரைம் சார்பில் டாக்டர் சுகன்யா, டாக்டர் அரவிந்த் குழுவினர், ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.