UPDATED : நவ 26, 2026 05:37 PM
ADDED : நவ 26, 2026 05:34 PM
அ நிறம் | அளவு
கோவை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், வரதட்சணை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு மற்றும் வரதட்சணை தடுப்பு தினத்தையொட்டி நடந்த பேரணியில், சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், ஒருங்கிணைந்த சேவை மையம், மாவட்ட மகளிர் நல அதிகார மையத்தினர், சமூக நல விரிவாக்க அலுவலர்கள், ஊர்நல அலுவலர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரதட்சணைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, சி.எஸ்.ஐ. பள்ளியில் நிறைவடைந்தது. கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். சமூக நல அலுவலர் தாரணி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
