ADDED : செப் 23, 2026 12:51 PM
அ நிறம் | அளவு
கோவை: தொழிலாளர்களை பாதிக்கும் நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி,தொ.மு.ச.,மற்றும் அதன் இணைப்பு சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்தது.
சங்க நிர்வாகி துரை தலைமை வகித்தார். மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களையும், பங்குகளையும் விறக கூடாது. தொழிலாளர்களை பாதிக்கும் நான்கு தொழிலாளர் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். அரசின் பொது சொத்துக்களை குத்தகைக்கு விடக்கூடாது. மின்சார சட்ட திருத்தம் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
